தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 28-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும் சிகிச்சை முடிந்து விரைவில் ரஜினி வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினி வெளியிட்டுள்ள ஆடியோவில் நான் நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.