Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஸ்டாலின்…. நாளை வீடு திரும்புகிறார்…. மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்…..!!!!!!!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு நுரையீரலில் 10 சதவிகிதம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி தொடர் நான்கு நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சூழலில் முதல்வர் டிஸ்சார்ஜ் குறித்து காவிரி மருத்துவமனை இன்று முக்கியமான தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் தொற்றில் இருந்து அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார். இதனை அடுத்து தனி வார்டில் இருந்து நாளை அவர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட உள்ளார். ஆனாலும் வீட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையாக ஓய்வில் இருக்க அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் தகவல் அறிந்து திமுக தொண்டர்களும் அக்கட்சியின் அபிமானிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |