Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் இளவரசர் பிலிப் மகனிடம் பேசிய வார்த்தைகள்.. நெகிழ்ச்சிப்பூர்வமான உரையாடல் வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் தன் மகனான இளவரசர் சார்லஸிடம் நெகிழ்ச்சிப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணமடைவதற்கு முன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தன்னுடைய மகனான இளவரசர் சார்லஸிற்கு  ஆலோசனைகள் சிலவற்றை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக Royal Commentator ராபர்ட் ஜாப்சன் கூறியுள்ளதாவது, அந்த உரையாடல் மிகவும் உணர்ச்சிபூர்வமானது, இளவரசர் பிலிப் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தபோது இனிமேல் நாம் குணம் பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது.

அப்போது இதய அறுவை சிகிச்சை, நோய் தொற்றுக்கான சிகிச்சை போன்றவை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த நிலையில்தான் தந்தையை காண இளவரசர் சார்லஸ் கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இளவரசர் பிலிப் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்காக அவரால் முடிந்ததை செய்து வந்தார்.

அந்த சமயத்தில் தான் தன் மகனிடம் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அது ஒரு நெகிழ்ச்சிப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது. ஏனெனில் அது வழக்கமான சந்திப்பு போன்று இல்லை. மேலும் படுக்கையில் இருந்தவாறு பிலிப், தன் மகன் சார்லஸிடம் இனிமேல் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கவனித்துக்கொள்வது, ராயல் குடும்பத்தை வழி நடத்துவது ஆகியவை தொடர்பான ஆலோசனைகளை அளித்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Categories

Tech |