Categories
சினிமா

மருத்துவமனையில் குழந்தைகள்?….. காரணம் என்ன தெரியுமா?…. கவலையில் விக்கி – நயன் தம்பதி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர்.

அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் நாத்தனார் என குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார் நயன்தாரா. அங்கு எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகியது. இதனிடையே நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக  அண்மையில் அறிவித்தனர்.

இது கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் மறுபக்கம் வாடகைத்தாய் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை குறை மாதத்தில் பிறந்ததாகவும், ஆகையால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |