நடிகை ராஸ்மிகா மந்தனாவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் வரும் சாமி சாமி என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா. ‘புஷ்பா-2’, ‘மிஷன் மஜ்னு’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த ராஷ்மிகாவின் உடல்நிலை பாதிப்படைந்தது.
எனவே விஜயவாடாவில் உள்ள பிரபல மூட்டுவலி சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுரவ் ரெட்டி என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். கால்சியம் குறைவு காரணமாக மூட்டுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.