சென்னை அருகே உள்ள கோபாலபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையின் 2ம் தளத்தில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கும் அறையில் தீ மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உயிர் சேதம் எதுவும் இல்லாமல் பலரும் காப்பாற்றப்பட்டு விட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.