Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் தீ…. 9 பேர் உடல் கருகி பலி…. துருக்கியில் சோகம் …!!

துருக்கியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர்.

துருக்கி நாட்டில் ஹாஸ்யன்டி  மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர்கள் அனைவருக்கும் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் குழாயில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தால்  கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் தீவிர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒன்பது கொரோனா நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு குழுவினர் தீவிபத்தால் மருத்துவமனையில் சிக்கிய நோயாளிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |