மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன், ராஜா, சுரேஷ், பார்த்திபன், பாலசுப்ரமணியன், நாடிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை குழு தனிப்படை குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ், மணிகண்டன், ராகுல் ஆகியோர் மோட்டார் சைக்கிளை மூன்று மாதங்களாக திருடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.