திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இச்சியான் நகர் அமைந்துள்ளது. இங்கு 4 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு ஹோட்டலும், 2,3-வது தளத்தில் அலுவலகமும், 4-வது தளத்தில் ஒரு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென 4-வது தளத்தில் உள்ள மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சிகிச்சையில் இருந்த நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர். இருப்பினும் 4 நோயாளிகள் தீ விபத்தில் சிக்கி உடல் கருதியை பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு பணியில் இருந்த ஒரு செவிலியரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் 37 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.