பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற நகரில் நிஸ்தார் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனை ஒன்று உள்ளது . அந்த மருத்துவமனையில் உடற்கூறு செய்யப்படும் மையத்தின் மேற்கூரையின் மேல் 500க்கும் மேற்பட்ட மனித உடல்கள் நிர்வாணமாக சிறந்த நிலையில் குப்பை போல வீசப்பட்டு கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதன் பிறகு இந்த உடல்களை முறைப்படி அகற்றும்படி உத்தரவிட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கூரையின் மேல் வீசிய மனிதாபிமானமற்ற செயலை செய்த ஊழியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.