தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படைப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேர்வின் முடிவுகளை தேர்வுகள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்தியா முழுவதும் 272 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 41,388 இடங்கள் மருத்துவ படிப்புக்காக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 37 மருத்துவ கல்லூரிகளில் 5200 இடங்கள் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது. அதன்படி 2022-23 ஆம் கல்வி ஆண்டில் பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ படிப்புகளுக்கு மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேர விரும்புபவர்கள் என்று இணையதளம் வாயிலாக நாளை முதலாக 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.