Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு….. 25-ந்தேதி தரவரிசை பட்டியல்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பி .ஃபார்ம் உள்ளிட்ட பட்டப்படிப்புகள், டிப்ளமோ நர்சிங்,இதர டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான இணையதளம் வழியாக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் .அதன் பிறகு ரேங்க் பட்டியலின்படி ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு தொடங்கும் என்றும் 28ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை ஆன்லைன் வழியாக கல்லூரிகளை தேர்வு செய்வார்கள் என்றும் மருத்துவ கல்வி இயக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |