Categories
மாநில செய்திகள்

மருத்துவரின் அலட்சியம்!…. நண்பன் பட பாணியில் பிரசவம்…. சோகத்தில் முடிந்த சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி(36). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (33) 2வதாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவரால் பிரசவ தேதி அறிவித்து இருந்த நிலையில், நேற்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதாவது வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூனாம்பேடு இல்லிடு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு புஷ்பா சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் யாருமில்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே 3 பேர் இருந்துள்ளனர். இதனிடையில் புஷ்பா தற்போது செய்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரசவத்தில் பிரச்சனை இருக்கிறது என குறிப்பிட்டு இருந்துள்ளது. ஆனால் இதனை செவிலியர்கள் சரிவர கவனிக்கவில்லை என்று தெரிகிறது. அதன்பின்  இங்கேயே சுகப்பிரசவம் பார்த்துவிடலாம் என செவிலியர்கள் தெரிவித்ததின்படி மாலை 6 மணிக்கு தலைகீழாக குழந்தையின் கால்கள் மட்டுமே வந்துள்ளது. இறுதியாக செய்வதறியாது தவித்த செவிலியர்கள் மருத்துவர் ஒருவருக்கு போன்செய்து தகவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் திரைப்பட பாணியில் வீடியோகால் வாயிலாக பிரசவத்தை செய்யும்படி மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவர் கூறிய ஆலோசனைப்படி செவிலியர்கள் முயற்சி செய்து இருக்கின்றனர். எனினும் குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை. அதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக புஷ்பாவை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் குழந்தை வரும் வழியிலேயே இறந்து பிறந்துள்ளது. அதன்பின் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் குழந்தை இறந்து பிறந்ததாக குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர் வாங்க மறுத்துவிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |