Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனையா…..? சோதனையில் சிக்கிய 2 பேர்….. நீதிபதி அதிரடி தீர்ப்பு….!!!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்த 2 பேருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலைவாசல் பகுதியில் இருக்கும் மருந்து கடைகளில் கடந்த 2021- ஆம் ஆண்டு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மருந்து கடை உரிமையாளர்களான வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை மற்றும் மருந்துகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் கொடுத்த மருந்துகளுக்கான உரிய ரசீதுகளை வழங்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் மருந்துகள் தர கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வினோத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதமும், செந்தில்குமாருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |