Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களால் இறந்துவிட்டார் எனக் கூறிய பெண்…. சுடுகாட்டில் உயிர் பெற்ற அதிசயம்….!!

மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற பிறகு உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் அமேபெத்கார் மருத்துவமனையில் 72 வயதான லட்சுமி என்பவர்  உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லக்ஷ்மிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு கொரோனா இல்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் இசிஜி எடுத்த போது உடலில் எந்த செயல்பாடும் இல்லை என தெரியவந்ததால் லக்ஷ்மி இறந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் லக்ஷ்மியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் லக்ஷ்மியின் உடல் சூடாகவே இருந்ததால் அவரின் பேத்தி நிதிக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவரை அழைத்து சோதனை செய்தபோது லக்ஷ்மி உயிருடன் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனிடையே உடனடியாக சுடுகாட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இசிஜி சரியாக வேலை செய்யாதது மற்றும் மருத்துவர்களின் அலட்சியம் ஆகியவற்றால் தனது பாட்டி உயிரிழந்தார் என நிதி குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |