கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் மூன்று வயது உள்ள குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் aluva வை சேர்ந்த மூன்றே வயதான சிறுவன் பிரித்திவிராஜ் இவன் நேற்று காலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காயினை விழுங்கி விட்டான். இதனால் அதிர்ச்சியான பிருதிவிராஜன் பெற்றோர்கள் உடனே அவனை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார்கள். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள் இங்கே இல்லை என காரணம் கூறி வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின் அவர்கள் அங்கிருந்து எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு சென்ற போது அங்கேயும் இதே பதில் தான் வந்தது. அதுமட்டுமில்லாமல் வாழைப்பழத்தையும் சாதத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் வழியாக காயின் வெளியேறிவிடும் என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர்கள் சிறுவனை தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். அங்கேயும் வாழைப்பழத்தை சாப்பிட சொல்லி, அனுமதி கொடுக்க மறுத்தனர். வேறு வழி இல்லாமல் சிறுவன் பிரித்திவிராஜை அழைத்துக் கொண்டு அவனது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
நேற்று மாலையில் சிறுவனது உடல் நிலை மிக மோசமாக போனதால் காலை தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளான். சிறுவன் நிலையைப் பார்த்து பெற்றோர்கள் கதறி துடித்து அழுதனர். சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை மட்டும் கொடுத்து இருந்தால் இந்த இழப்பு நேர்ந்திருக்காது எனவும் அவர்கள் குற்றம் சாட்டினார். மேலும் அச்சிறுவன் வசிக்கும் பகுதியானது கொரோனாவால் தனிமையாக்காப்பட்ட பகுதியாக இருந்ததாக கூறி சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஆலப்புழா மருத்துவ நிர்வாகம் கூறுகையில்,”சிறுவன் குடலில் காயின் இருந்தது அதனால் உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை. ஒருவேளை சுவாசப் பாதையில் சிக்கி இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த காயினை அகற்றி இருப்போம்.குடலில் சிக்கிய காயினை வெளியேற்ற வேண்டும் என்று தான் வாழைப்பழத்தையும் காலை,மாலை தினமும் தண்ணீரையும் நிறைய குடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையின்படி மலத்தின் வழியே காயின் வெளியேறி இருக்கக்கூடும் எனக் கருதியதால் குழந்தையை சிகிச்சைக்காக நாங்கள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை வீட்டிற்கு சென்றதும் அங்கு என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே இறப்புக்கான உண்மை என்ன என்பது தெரியவரும் என விளக்கம் கொடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.