Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களின் அலட்சியம்… பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்பட்டவலி… ஸ்கேன் எடுத்த போது மிரண்டு போன மருத்துவர்கள்..!!

விஜயாபுராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் துணியை வைத்து தைத்துள்ளனர். தற்போது ஆறு மாதத்திற்கு பிறகு அந்த துணியை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

விஜயாபுரா மாவட்டம் முத்தேபிகாலை சேர்ந்தவர் ஷாகின் உத்னால். இவருக்கு திருமணம் முடிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் விஜயபுரா டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது.

இதை அடுத்து ஒரு வாரம் சிகிச்சைக்குப் பின்னர் தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக கூறி அவரை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. வயிற்றில் கல் அல்லது கட்டிகளோ இருக்கின்றதா என்பதை கண்டறிய ஸ்கேன் எடுத்தார்.

அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டிருந்தது  தெரியவந்தது. பிரசவத்தின்போது வெளியேறிய ரத்தத்தை துடைக்க டாக்டர்கள் துணியை பயன்படுத்தியதும் அந்த துணியை வயிற்றில் வைத்து தைத்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டரிடம் சென்று முறையிட்டார். அப்போது கவனக்குறைவால் இதுபோன்று நடந்து விட்டதாகவும் டாக்டர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சை மூலம் துணியை அகற்றுவதாகவும் கூறினர். இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷாகின் உறவினர் மருத்துவ அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |