Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மருத்துவர்களின் அலட்சியதால்…. குழந்தை திடீர் மரணம்…. உறவினர்கள் போராட்டம்…!!

மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள்  உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலைச்செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி பிரசவத்துக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அக்குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்நாதன் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்திலும், குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர காவல் துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர்.

அதன்பிறகு அருள்நாதன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளார்.

 

Categories

Tech |