Categories
உலக செய்திகள்

மருத்துவர்களின் ஆய்வு…. பாம்பு கடிக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பா….? எந்த நாட்டில் தெரியுமா….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பிரித்தானியாவில் பாம்பு கடித்ததாக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11 ஆண்டுகளில் 300 பேருக்கும் அதிகமான பாம்பு கடிக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் இளம் வயதினர் அல்லது சிறு பிள்ளைகள் என தெரிவித்துள்ளார்கள். அப்படி பாம்பு கடித்து சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்துவிட்டாலும், சிலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறும் அளவுக்கு சென்றதாகவும், ஒருவருடைய விரலின் ஒரு பகுதியை அகற்றவேண்டியிருந்ததாகவும், மற்றொருவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ராஜ நாக பாம்பு கடித்த ஒருவர்  குடிகாரனை போல் தடுமாறி கீழே விழுந்து பின்பு நிலைகுலைந்து  உயிரிழந்ததாகவும் நேரில் கண்டவர்கள் சிலர் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து வேறொரு  நபருக்கு பாம்பு கடிக்கான நச்சு முறிவு மருந்து 10 டோஸ் கொடுக்கப்பட்ட பின்னரும் கடைசியில் மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்ததாகவும் அந்த நபருக்கு விஷத்தை முறிக்க கொடுக்கப்பட்ட அந்த நச்சு மருந்தே அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள். மேலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 2009ஆம் ஆண்டிலிருந்து  2020ஆம்  ஆண்டு வரை 321 பேர் பாம்பிடம் கடிபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |