நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் மருத்துவர்கள் பணி இன்றியமையாதது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனையடுத்து தேசிய மருத்துவர்கள் தினமான இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் முன்களத்தில் நின்று கோடிக் கணக்கான உயிர்களை காப்பாற்றி, சமுதாயத்தின் நலனுக்காக பாடுபட்ட மருத்துவர்களுக்கு தன்னுடைய சல்யூட் என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மருத்துவர்களுக்கு கேரள அரசு தொடர்ந்து தங்கள் ஆதரவை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.