Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை தாக்குவோர் மீது…. வழக்குபதிவு செய்ய மத்திய அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர்.  அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. களப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்குகிறது.

இந்நிலையில் மருத்துவர்களைத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிற போது அவர்களின் மன உறுதியைக் குலைத்து விடும். பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தி விடும். இது சுகாதார பாதுகாப்பு முறையை மோசமாக பாதித்து விடும் என்பதால் தாக்குதல் நடத்துகிறவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |