Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் தாய் உயிரிழப்பு… உறவினர்கள் முற்றுகை !!..

ஆரணி மாம்பாக்கம்   அருகே  அரசு  மருத்துமனையில் பிரசவத்தின்  போது  பெண் உயிரிழந்தது  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது .

திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி  அருகே இருங்கூர்   கிராமத்தை  சேர்ந்த அரிவிழிவேந்தன்   மற்றும்  ஜமுனா  தம்பதியினர் . இவர்களுக்கு  திருமணம்  ஆகி  இரண்டு  வருடங்கள்  ஆன  நிலையில்  ஜமுனாக்கு  தலை  பிரசவத்திற்கு  மாம்பாக்கம்  அரசு  மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்டார் .இன்று  காலை  பிரசவவலி  வந்தது .

இதையடுத்து  மருத்துவர்கள்  அங்கு  இல்லாததால்  அங்குள்ள  செவிலியர்கள்  மற்றும்  உதவியாளர்கள்  பிரசவம்  பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை  பிறந்துள்ளது. குழந்தை  பிறந்தவுடன்  ஜமுனாவிற்கு நச்சு  குடல்  வெளியில்  வராததால்    நிலை  கவலை கிடமாக  இருந்துள்ளார் . இதனால் மேல்  சிகிக்சைக்காக  வேலூர்  அடுக்கம்பாறை  அரசு  மருத்துவமனைக்கு  கொண்டு  செல்வதற்கு   108 ற்கு போன்  செய்தனர் .  இதையடுத்து  ஆம்புலன்ஸ்  மருத்துவ  உதவியாளர்   ஜமுனாக்கு   கொண்டு  செல்லும்  வழியில்  சிகிக்சை அளித்ததாக  கூறப்படுகிறது . இதனால்  ரத்த போக்கு  ஏற்பட்டு மூச்சு  திணறல்  ஏற்பட்டுள்ளது .  இதையடுத்து ஆரணி  அரசு  மருத்துவர்கள்  பரிசோதனை  செய்துவிட்டு  வரும்  வழியிலே  இறந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து  ஜமுனாவின்  உடல்  ஆரணி  அரசு  மருத்துவமனையில்  வைக்கப்பட்டுள்ளது . ஜமுனாவின்  உறவினர்கள்  ஆரணி  அரசு  மருத்துவ மனையை  முற்றுகையிட்டு  போராட்டம்  நடத்தி வருகின்றனர் . இதுகுறித்து  மாம்பாக்க  அரசுமருத்துவமனை  மருத்துவர்கள்  எந்தவித  கருத்தும்  தெரிவிக்காததால்  ஜமுனாவின் உடலை  வாங்க  மறுத்து   உறவினர்கள்  போராட்டத்தை  நடத்தி வருகின்றனர் .

Categories

Tech |