Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் கண்காணிப்பில் ஸ்டாலின் தாயார்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவினால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அதே மருத்துவமனைக்கு மீண்டும் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் .

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். வயது மூப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாகவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |