Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மருத்துவர்கள் தினத்தில்… கணவருடன் சேர்ந்து ஜெனிலியா எடுத்த முடிவு… குவியும் பாராட்டுக்கள்..!

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது கணவருடன் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்தது பாராட்டுகளை குவித்து வருகின்றது

தமிழ் திரையுலகில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகின்றார். நேற்று முன்தினம் உலக மருத்துவர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெனிலியா மற்றும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரிதேஷ் மற்றும் ஜெனிலியா “நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து வெகுநாட்களாக யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கு சரியான நேரம் அமையாமல் இருந்துவந்தது. மருத்துவ தினத்தை முன்னிட்டு எங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம். நாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு வாழ்க்கைதான். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற நீங்களும் இதுபோன்று உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |