மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு குறித்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்த புகார் அளிப்பதற்காக 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நமது தமிழக முதலமைச்சர் கூறியது போல் இரண்டு மாதங்களுக்குள் புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் அதிக அளவில் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்கள் மட்டும் இருக்கும் இந்த காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது. இந்த நிலையில் இந்த மாதம் 30-ஆம் தேதி வரை இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இதுவரை 99 சதவீதம் வேறு முதல் தவணை தடுப்பூசியையும், 99 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.