பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணை கமிட்டி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு கணபதிபுரம், சூரப்பள்ளம், கன்னக்குறிச்சி, ராஜாமங்கலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருவார்கள். இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
இதுகுறித்து கர்ப்பிணி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார இயக்குனருக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியது. இந்தக் குழு தாக்கல் செய்யும் அறிக்கையை பொருத்தே மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.