தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% ஒதுக்கீடை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழக கத்தோலிக்க கல்விச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவேலு அகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை முன்வைத்து மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. எனவே ஜனவரி 15ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.