Categories
மாநில செய்திகள்

மருத்துவ உலகிற்கே பேரிழப்பு…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்….!!!!

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 89.ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தனது சகோதரர் நிறுவிய நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் சென்றவர். சென்னை,மதுரை மற்றும் கோவை போன்ற இடங்களில் மருத்துவ சேவை செய்து வந்த அவரது மறைவு மருத்துவ உலகிற்கே பேரிழப்பு என்று தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |