எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அக்டோபர் 20-ல் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விளையாட்டு பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அக்.,19-ல் கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணைய வழியில் அக்.,25-ல் நடைபெறும். அக்.,21 – 27 வரை சுயநிதி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும். அக்., 27, 28 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றார்.