மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் நாளையே மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறார்கள். எப்போதும் வழக்கமாக ஒரு வாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அதனால் கல்லூரிகளில் சேரும் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருகின்ற 20ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால், அதற்கு முன்னதாக மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.