தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கவுன்சில் நேற்று ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. முதல் நாள் கவுன்சிலிங்கிற்க்கு 761 பேர் வந்தனர் அதில் 541 பேருக்கு மருத்துவ படிப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அதில் அவர் கூறியதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அவர்களுக்கு 437 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 107 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
அதோடு பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங் நாளை தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 13ஆம் தேதி தற்காலிக 20க்கு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் இறுதி ஆணை பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று வழங்கப்படும் அதோடு முதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க அவர்கள் இரண்டாம் கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பினால் அதற்காக பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.