Categories
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீடு திட்டம்… வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

மருத்துவ காப்பீடு தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் மயிலாடுதுறை மற்றும் குற்றாலம் ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது. எனவே மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படுபவர்கள், உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்சி வண்டி, கை, கால் செயற்கை உறுப்புகள், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் கீழ் குறிப்பிட்ட இடங்களில் நடந்து வரும் மதிப்பீட்டு முகாம்களில் கலந்து கொள்ளலாம்.

இன்று (வியாழக்கிழமை) மயிலாடுதுறை டிஇஎல்சி உதவி பெறும் நடுநிலை பள்ளி மற்றும் நாளை 26ம் தேதி (சனிக்கிழமை) குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிகளில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை குத்தாலம் ஆகிய வட்டார வள மையங்களில் உள்ள பதினெட்டு வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற விரும்புவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க வரும் போது பிறப்பு சான்றிதழ் நகல், அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 எண்ணிக்கை, வருமான சான்று நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தேசிய அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |