Categories
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீடு திட்டம்…. அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை….!!!!

தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 1,414 பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து விலகி வைக்கப்படும். அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்டத்தை அலட்சியப்படுத்தினால் 104 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். தற்போது 1700 மருத்துவமனைகளில் இந்த காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |