Categories
மாநில செய்திகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி….. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் புவிசார் குறியீடு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் அந்த பொருளை வேறு எந்த இடத்திலும் தயாரிக்கக்கூடாது. அதோடு புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான ஏற்றுமதியும் அதிகரிக்கும். இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முதன்முதலாக காஷ்மீரில் விளைவிக்கப்படும் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் வீணை, கோவை வெட் கிரைண்டர், பழனி பஞ்சாமிர்தம், கடலை மிட்டாய், பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பாரம்பரியமான நெல் வகைகளில் ஒன்றான புரத சத்தும், நார்ச்சத்தும் அதிக அளவில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கும் புவிசார் குறியீடு வாங்குவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த அரிசியை சாப்பிடுவதன் மூலம் ஒரு இளவட்ட கல்லை தூக்குவதற்கான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால்தான் மாப்பிள்ளை சம்பா அரிசி என்றே பெயர் வந்ததாம். மேலும் அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துவிட்டால் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கும். இந்த அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |