உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் சுண்டைக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறையில் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன.
அவ்வாறு உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு சுண்டைக்காய் அருமருந்தாக அமைகிறது. சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை குணமாகும். சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.