மருத்துவ குணம் வாய்ந்த வேப்பம்பூ ரசம் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள பல்வேறு நோய்கள் தீர்ந்து உடல் நலம் பெறும்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதனை சில வீட்டு மருந்துகள் சரி செய்யும் என்பதை அவர்கள் அறிவதில்லை. வீட்டில் மருத்துவ குணம் வாய்ந்த சில மருந்துகளை நாமே செய்து அருந்துவதால் விரைவில் அந்த நோய் ஓடிவிடும். அதன்படி மருத்துவ குணம் வாய்ந்த வேப்பம்பூ ரசம் உடலுக்கு மிகவும் நல்லது. அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து அதில் தக்காளி பழங்களை போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வறுத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒன்றரை தேக்கரண்டி துவரம் பருப்பை புளித் தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய் வற்றல் போட்டு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து புளித்தண்ணீரில் கொட்ட வேண்டும். மேலும் வேப்பம் பூவை எண்ணெயில் வறுத்து கொதிக்கும் ரசத்தில் கொட்டி கீழே இறக்கி கொத்தமல்லித் தலையை சேர்த்தால் வேப்பம்பூ ரசம் தயார்.