பல லட்சம் பேர் உயிரைக் காப்பாற்ற உதவிய ‘ஓஆர்எஸ்’ கரைசலை கண்டுபிடித்த புகழ்பெற்ற மருத்துவர் திலீப் மகாலனபீஸ் (88) வயது மூப்பால் கொல்கத்தாவில் காலமானார். மே.வங்கத்தை சேர்ந்த திலீப், கடந்த 1966-ல் ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்தார். நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் எளிய வழியாக ஓஆர்எஸ் கரைசல் உள்ளது. தன் வாழ்நாளை மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்த மகாலனபீஸ், தன் வாழ்நாள் சேமிப்பான 1 கோடியை குழந்தைகள் நலத்துக்காக நன்கொடையாக அளித்தார்.
Categories