Categories
உலக செய்திகள்

மருத்துவ சேவை மையத்தில் 298 கோடி ஊழல்…. 12 ஆண்டுகள் சிறை தண்டனை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பாகிஸ்தானில் மருத்துவ சிகிச்சை அளிக்காமலேயே போலி பில், ஆவணங்கள் தயாரித்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் உள்ள நிறுவனத்தில் அமெரிக்க மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் உள்ள சில மாநிலங்களை சேர்ந்தவர்களின் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை கவனித்து வருகிறது. இந்த வகையில் பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரை சேர்ந்தவர் முகமது ஆதிக். இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முகமது ஆதிக் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி ‘போலி ஆவணங்களை’ தயாரித்து உள்ளார்.

மேலும் இவர் யாருக்கும் மருத்துவ சிகிச்சை கொடுக்காமலேயே ஒருவர் பெயரில் போலியான ‘பில்’ களை தயாரித்து 298 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளார். மேலும் பண பரிமாற்றம் மோசடியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால் முகமது ஆதிக் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த அமெரிக்காவின் இல்லினாய்ஸ் வடக்கு மாநில  நீதிமன்ற நீதிபதி மணீஷ் ஷா, சுகாதார மோசடிகளில் ஈடுபட்டு 48 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.358 கோடி)  சுருட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது ஆதிக்குக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 360 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |