மருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் பதிவில் சிறு தவறுகளால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த 19ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக சேர்க்கை பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆன்லைன் பதிவு என்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி சிறு தவறுகளுக்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாது. ஆன்லைனில் சில சான்றிதழ்களை இணைக்க முடியாவிட்டால் தனியாக அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்தார். ஆன்லைன் விண்ணப்பங்கள் பூர்த்தி அடைந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், சென்னையில் நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆவணங்களை ஒப்பிட்டு பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.