இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் மத்திய அரசு நீட் என்னும் நுழைவு தேர்வு தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ நுழைவு தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி,ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உள்ளிட்ட 13 முறைகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தற்போது கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மற்ற மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் எம்பிபிஎஸ், பிஎஸ் படிப்பிற்காக விண்ணப்ப பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் கடந்த 12ஆம் தேதி கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 26ம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு இந்த வருடம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்ததால் தற்போது விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது அக்டோபர் மூன்றாம் தேதி இரவு 8 மணி முதல் அக்டோபர் ஆறாம் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பத்தில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொண்டு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது