Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்…. 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிப்பு….!!

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பிற்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியது. இதன் காரணமாக பல அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் பரிந்துரையை நிராகரித்துள்ளதாக மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளதால் தற்போது அரசு பரிந்துரைத்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு நிராகரித்தது. இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்காமல் தாமதிப்பதாக புதுச்சேரி மாணவி திவ்யதர்ஷினி தொடர்ந்த வழக்கில் இது தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 7.5 சத வழங்கப்படும் சூழலின் புதுச்சேரியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அந்த அரசு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |