தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு 408 இடங்களும் உணவு, கோழியினம், பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன.
இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை www.adm.tanuvas.ac.in இளையதளத்தில் அறியலாம் என தெரிவித்துள்ளது.மேலும் விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தெரிவித்துள்ளது.