தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.
மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, ” தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு இன்று முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
வருகின்ற 12ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப பதிவு செய்யலாம். அது மட்டுமன்றி 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் அனைவரும் தனி விண்ணப்பம் குறிப்பிட்ட அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது”.