Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு… ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது… அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!!

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி முடிவு எடுப்பதற்கு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் வழிவகை செய்யக் கூடிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள்.அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ” மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிக்குமாறு முதலமைச்சர் அறிவுரையின்படி ஆளுநரை சந்தித்தோம். தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை பற்றி ஆளுநரிடம் விரிவாக கூறினோம். நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்திருக்கிறார். ஆனால் ஆளுநரின் பரிசீலனையில் உள்ள மசோதாவிற்கு கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநர் முடிவு எடுப்பதற்கு காலநிர்ணயம் விதிக்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக முடியும் என்பதால் சமூகநீதியை பாதுகாப்பதற்கு விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |