மருத்துவப்படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நேற்றோடு கால அவகாசம் நிறைவடைந்தது.
கடந்த மாதத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் இந்த விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 39,000 மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ள தங்களது விண்ணப்பங்களை நேற்று இரவு 11.59 மணிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த விண்ணப்பங்களை சரிபார்த்த பிறகு வரும் 16-ம் தேதி இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட ஓரிரு தினங்களில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் இன்று இறுதிநாள் என்பதால் ஒரே நாளில் அதிகமானோர் மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.