Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பணியாளரை தாக்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் மருத்துவத்துறை இளம்பெண் அலுவலர் ஒருவர் நடுத்தெருவில் போலீசாரால் தாக்கப்பட்டு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த பெண் ஊழியர், பணி முடித்து விட்டு வீடு திரும்பும் போது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அவருக்கு அபராதம் விதித்த போது மருத்துவமனையில் அனுமதி கடிதத்தை காட்டியபோதும் போலீசார் கேட்கவில்லை.

இதில் காவல்துறை அதிகாரிக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தார். அதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் அவரை தாக்கியதுடன் இரண்டு பெண் போலீசார் அவரை தரதரவென சாலையில் இழுத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதி கடிதம் பெற்று அடையாள அட்டை எல்லாம் இருந்தும் போலீசார் தம்மிடம் அதிகார தோரணையில் மீறியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோ காட்சியை அந்த பெண் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் நியாயம் கேட்டுள்ளார்.

Categories

Tech |