ஒட்டகப் பாலில் அதிக அளவு ஜிங்க், பொட்டாசியம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது. பசும்பாலை விட ஒட்டகப் பாலில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் ஏ ஒட்டக பாலில் அதிகமாக உள்ளது. ஒட்டகப் பாலில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த ஒட்டகப்பால் தென்னிந்தியாவில் தற்போது முதல்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது.
அதாவது கோவையில் உள்ள நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் அரசு அனுமதியுடன் குஜராத்தில் இருந்து ஆறு ஒட்டகங்களை கொண்டுவந்து பண்ணை அமைத்து பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்கு மலிவான விலையில் ஒட்டக பாலை விற்பனை செய்து வருகிறார். இது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பண்ணை அமைத்து சலுகை விலையில் மருத்துவ பயன்பாட்டுக்கு ஒட்டகப்பால் கொடுக்க வேண்டும் என்றும், சர்க்கரை நோயினால் தான் பாதிக்கப்பட்டிருந்த போது இந்த ஒட்டகப்பால் குடித்து குணமடைந்ததால் இந்த மாதிரியான சேவையை செய்து வருவதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் “சங்கமித்ரா” ஒட்டக பால் பண்ணையின் மூலம் இந்த சேவைகளை செய்து வருவதாக கூறும் மணிகண்டன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கோவை மக்களுக்கு ஒட்டகப் பாலை அறிமுகம் செய்து வைத்து அசத்தியுள்ளார்.