Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. டாக்டர்கள் அளித்த தகவல்…. போக்சோவில் வாலிபர் கைது…!!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் கூலித்தொழிலாளியான தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி தாமோதரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமியிடம் டாக்டர்கள் வயது குறித்து கேட்டபோது அவருக்கு 17 வயது தான் ஆகிறது என்பது உறுதியானது. இதுகுறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |