மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஆன்லையன் மூலம் மாணவர்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் இந்த மாதம் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை போல் 40 ஆயிரத்து 256 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 36 ஆயிரத்து 100 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த தரவரிசை பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று மாணவர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும் இவற்றிற்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும். அதில் தகுதிப் பெரும் மாணவர்கள் நவம்பர் 4-ஆம் தேதி கல்லூரியில் சேர வேண்டும். மேலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.