Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர்கள் இனி ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிய கூடாது….. மாநில அரசு அறிவிப்பு….!!!

மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களும் சேலை அல்லது சுடிதார் அணிந்து தலை முடியை கழற்றாமல் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி பணியில் இருக்கும் பொழுது கழுத்தில் ஏப்ரான் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆண்களும் தாடியை ஷேவ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில மாணவிகள், டாக்டர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் விதிகளின்படி ஆடை விதிமுறைகளை பின்பற்றாததை கண்டறிந்து உயர் அதிகாரிகள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |